என்னை கவர்ந்த பிரபலங்கள்
சச்சின் டெண்டுல்கர்,ரஜினி,ரஹ்மான் ஆகிய மூவரும் என்னை கவர்ந்த பிரபலங்கள் ஆவர்கள் ..
மூவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை நிறைய உள்ளது.
நேர்மை,அடக்கம்(உயர்ந்த இடத்தில் இருந்தாலும்) ,எளிமை என்று சொல்லி கொண்டே போகலாம்...
முதலில் ரஜினி பற்றி பார்போம்:
ரஜினி குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும். எந்த வித எதிர்பார்ப்புமில்லாத ஒரு ரசிகனால் மட்டுமே அப்படியெல்லாம் எழுத முடியும்.
இது ஒருபுறமிருக்க, ரஜினியை உள்ளுக்குள் பிடித்தாலும், படித்தவர்களாலும், உலக சினிமாக்களை அலசி ஆராய்ந்த மேதைகள் போல் நடிக்கும் மேதாவிகளின் கூட்டத்தாலும் கிண்டலடிக்கப்படுவோமோ எனப் பயந்து ரஜினியை பிடிக்காததுபோல வெளியில் காட்டிக்கொள்ளும் கூட்டம் ஒன்று உள்ளது.அக்கூட்டம் இக்கட்டுரையின் முடிவில் அழியுமென இல்லாமல் போகுமென நம்புவோம்..
க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை ரஜினி பின்பற்றவில்லை. இருந்தாலும் இருவரிடமும் ஒரே மாதிரியான தனித்தன்மை உண்டு. அதை வெளிக் கொணரும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை.
ரஜினியின் அரசியல் வாழ்க்கையையோ, அவரது ஆன்மீக வாழ்க்கையையோ நியாயப்படுத்த, ஏன் நான் தொடவே போவதில்லை. அவர் உயிராய் நேசிக்கும் அவரது திரையுலக வாழ்க்கையை அலசவே இதை எழுதுகிறேன். இந்தக் கட்டுரை ரஜினியின் தீவிர ரசிகர்களுக்காக மட்டுமல்ல.
ரஜினியை ஒரு கோமாளி என்றும், “பல நடிகர்கள் மிகவும் உழைத்து சம்பாரிக்கும் காசை, ஒன்றுமே செய்யாமல், உடல் அசையாமல் சம்பாரித்துவிட்டுப் போகிறார் ரஜினி”, போன்ற வசனங்களைச் சொல்லித் திரியும் ரஜினி வெறுப்பாளர்களுக்கும், சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கும்தான். மிகவும் முக்கியமாக, ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப் படியுங்கள்.
இது ரஜினிக்கே மிகவும் பிடித்த ரஜினி என்ற நடிகரைப் பற்றியது மட்டுமே!!!
ஆசியாவில், அகில உலக நட்சத்திரம் ‘ஜாக்கி சானு’க்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி, தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ஃபிரஞ்சு மொழிப் படத்தில் ஒரு காட்சியில் பின்ணணியில் ரஜினி படம் தொலைக்காட்சியில் ஓடுகிறது. ஜப்பானில் ரஜினிக்காக உயிரையும் கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ அவரை சர்வதேச சூப்பர் ஸ்டார் என்கிறது.
குறிப்பிட்ட ஒரு மாநில மொழியில் மட்டுமே நடிக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? தமிழ்நாட்டின் சொத்தான ரஜினி மேல் பிரஞ்சுக்காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும் என்ன இவ்வளவு பாசம்?
ரஜினி ஆதரவாளர்கள் வழக்கமாக சொல்லும், “அவரு ரொம்ப சிம்பிள்…. தொழிலை தெய்வமாக மதிப்பவர்…”
போன்றவை அல்ல, இதற்குக் காரணங்கள்.
அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்துவிட்ட தனித்தன்மையும், ஆங்கிலத்தில் Charm, Charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வசீகரமும் தான்.என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராது… ஏனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. சிலபேருக்குதான் இது உண்டு. என்னதான் சில பூனைகள் வரிவரியாய் சூடு போட்டுக் கொண்டாலும், அவை புலி ஆகா!
ரஜினியைப் போன்ற நடிகர்கள் மொத்த அண்டத்திலேயே வெகுசிலர்தான். Clint Eastwood, Charlie Chaplin, Al Pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp.
இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினிக்கு மட்டுமே அந்த சிறப்பு உண்டு.
Clint Eastwood தனது சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப் படமான ‘Gran Torino’ வரை தனது தோற்றத்தை மாற்றியோ, குரலை மாற்றியோ நடித்ததில்லை. தனது எழுபத்தெட்டாவது வயதில் கூட மிகப்பெரிய துப்பாக்கியைத் தூக்கி, வில்லன்களிடம், “I blow a hole in your face and then I go in the house… and I sleep like a baby. You can count on that.(உன் முகத்தில் சுட்டு உன்னைக் கொன்றுவிட்டு, ஒரு குழந்தையைப் போல என்னால் நிம்மதியாக தூங்க முடியும்!)” என பஞ்ச் டயலாக் பேசினாலும் திரையரங்கில் விசில் பறக்கிறது.
இந்த ஸ்டைல் உள்ள நடிகர்களை ஹாலிவுட்டிலும் மாஸ் ஹீரோக்களாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நடிகர்களையெல்லாம் அழுகவிட்டும், வில்லனிடம் கெஞ்ச விட்டும் படமெடுத்தால் அங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். க்ளின்ட் ஈஸ்ட்வுட் காவல்துறை அதிகாரியாக, ரஜினியின் கொடி பறக்குது ‘சிவகிரி’ பாணியில் அதிரடியாக நடித்த திரைப்படம்தான் ‘Dirty Harry’. இதில் அவர் சொல்லும் “Go on… Make my day” போன்ற வசனங்களை, மிகப்பெரும் நடிகர் De Niro சொல்வதுபோல் கற்பனை செய்தால் கூட மகாகேவலமாக இருக்கும்.
அதேபோல் ரஜினியின், “ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” போன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும்.
ரஜினி, க்ளின்ட் ஈஸ்ட்வுட் போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள், நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால் கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு ஹீரோக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம், பேச்சு, செயல் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.
ரஜினியின் குறிப்பிட்ட சில படங்களே அவரின் திறமையின் ஒரு பகுதியை வெளிக்கொண்டு வந்த படங்கள். எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, தில்லு முல்லு… இப்படி…
தளபதியில் மம்முட்டி சாகும் தருவாயில் எதிரிகளால் அடித்துப்
போடப்படும் போது மருத்துவமனையில் அவரிடம் ரஜினி அரற்றும் காட்சி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ரஜினியை மட்டுமே முதலாய் வைத்து எடுக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் சிவாஜி. பலமான கதையே இல்லாமல், வெறும் ரஜினியால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்த முடிகிறதெனில், நல்ல கதையோடு, ரஜினி என்ற திறமையும், கம்பீரமும் வாய்ந்த ஒரு மாபெரும் நடிகரை சரியாய் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் எப்படிப்பட்ட வெற்றி பெறும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
ஒரு டிவியின் விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டபோது, ரஜினியே, தான் ஷாரூக்கான் நடித்த ‘Chak de India’ திரைப்படம் போன்ற கதையுள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகத் பேசியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.
ரஜினி என்ற, திரைப்படக் கல்லூரியில் இணைந்து படிக்கும் அளவுக்கு சினிமாவைக் காதலித்த அந்த நடிகனுக்குள் இருக்கும் சினிமா தாகத்தையும் ஏக்கத்தையும் உணர்த்தியது ரஜினியின் அந்தப் பேச்சு.
ரஜினி எப்போதுமே தனக்குள் இருக்கும் நடிகருக்கான சரியான தீனி வரும்போது பட்டினி போட்டதில்லை என்பதை இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ரசிகர்கள் உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான அந்த மாபெரும் நடிகரிடம் நான் இன்னொரு பாட்ஷாவையும், இன்னொரு படையப்பாவையும் எவ்வளவு எதிர்பார்க்கிறேனோ, அதேபோல் இன்னொரு தில்லுமுல்லுவையோ, இன்னொரு முள்ளும் மலருமையோ எதிர்பார்க்கிறேன்.
இதுபோல் மாறுபட்ட இரண்டு வகைப் படங்களிலும் நடிக்க உலகத் திரைப்பட வரலாற்றில் ஒருவரால் மட்டுமே முடிந்தது… முடியும்!
அவர் ரஜினி… ரஜினி மட்டுமே!
"வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி!" - ஷாரூக்
யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை.
திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.
ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.
ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.
இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!
ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி," என்றார்.

No comments:
Post a Comment