Sunday, 4 March 2012

அரவான்




இவ்வாண்டு எதிர்பார்த்த படங்களுள் ஒன்று.சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை மிக துல்லியமாக காட்டியுள்ள படம்தான் அரவான். 


பசுபதி களவாணி கிராமத்துல உள்ள ஒரு களவாணி.. அவர் அசலூர்ல போய் களவாண்டு வர்றதுதான் அந்த கிராமத்து மக்களுக்குப் படி அளக்குற அரிசி.. அவர் மதிப்பு மிக்க நகைகளை கொள்ளை அடிச்சு வந்தாலும்  ரொம்ப கம்மி விலைக்கு அதை எடுத்துக்கிட்டு பண்டமாற்றா கொஞ்சம் கேப்பை தர்றாங்க.. 


மகாராணியோட வைர நெக்லஸ் திருட்டு போயிடுது.. அதை கண்டு பிடிச்சுக்கொடுத்தா 6 மாசத்துக்கு உக்காந்து சாப்பிடற அளவு நெல் கிடைக்கும்னு சொல்றாங்க.. பசுபதி அதை தேடி போகையில் தான் ஹீரோ ஆதி சகவாசம் கிடைக்குது.. ஆதியும் ஒரு களவாணி தான்.. அவர் தான் அந்த நகையை களவாண்டவர்.. 


அந்த நகையை மகா ராணியிடம் ஒப்படைச்சு கிராம மக்களுக்கு நெல் வாங்கி தர்றாரு பசுபதி.. ஆதி பசுபதி கூடவே கூட்டு சேர்ந்துடறார்..
 இதற்கிடையில் ஆதியைப் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் எழுகிறது. பசுபதியின் தங்கை வேறு அவன் மேல் காதல் கொள்கிறாள். களவாடப் போகையில் பசுபதி மட்டும் மாட்டிக் கொண்டு விட அதிகாலையில் அவனை போய் காப்பாற்றிக் கொண்டு வருகிறான். அவர்களின் நட்பு இறுகுகிறது. பசுபதி மஞ்சுவிரட்டில் காயம்பட, அவனை காப்பாற்றும் பொருட்டு தான் யார் என்கிற உண்மையை போட்டுடைக்கிறான். ஆதி யார்? அவனுக்கு இந்த ஊருக்குமான உறவு என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடை திரையில்.ஃபிளாஸ் பேக் கதை.




பசுபதியும், ஆதியும் சரியான தேர்வு. படம் முழுக்க அவர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது. 
வியந்து பாராட்ட வேண்டும் என்றால், இயக்குனருக்கு பின்பு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தைத்தான்..! காணாடுகாத்தான் வீடுகளின் பிரமாண்டத்தையும், காடு, மலை, அருவி என்று அவர் படம் பிடித்திருப்பவைகள் அவர்களின் கடுமையான உழைப்பைக் காட்டுகிறது..!முன்னூறு ஆண்டு பழமையான மக்களின் வாழ்விடங்களை, பழமை மாறாமல் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர் என அனைத்து டெக்னீசியன்களும் இணைந்து ஒவ்வொரு பிரேமாக செதுக்கியிருக்கிறார்கள்.
கரிகாலனுடனான சண்டையின்போது எருமைக் கூட்டத்தைக் கூட்டி வந்து பசுபதியை மீட்டுச் செல்லும் ஆதியின் சண்டை கிராபிக்ஸில் சின்னாபின்னமாகிவிட்டது. கொஞ்சம் செம்மைப்படுத்தி செதுக்கியிருக்கலாம்.. பணமா இல்லை..? 


மைனஸ் -
படம் கிட்டத்தட்ட நத்தை வேகத்தில் நகர்கிறதே... கொஞ்சம் கத்தரி போடலாம் என்ற சிந்தனையே இல்லாமல் வேலைபார்த்திருக்கிறார்கள் படத்தின் எடிட்டர்கள்.
இதில் தேவையில்லாமல் வர்ற பாடல்கள் வேறு.
படத்தின் முக்கிய பலவீனம் இசை. கார்த்திக்கு  முதல் படத்திலேயே இத்தனை வலுவான குற்றசாட்டுகளை வைக்க தயக்கமாக இருந்தாலும்... உண்மை அதுதான்.
தாசியாக வரும் பெண் பாடும் பாடல் அக்மார்க் நகைக்கடை விளம்பர பீலிங்கை தருகிறது. 
ஆதி, பிடிபட்ட பின்பு இயேசுநாதரை போல் கொண்டு செல்லப்படுவதும், திருமாறனின் மனைவியும், மகனையும் அவ்விடத்தில் காட்டும் யுக்தியும் சுவாரசியமாகத்தான் இருந்தது. என்றாலும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறையே..! 
ஒரு களவுக் கூட்டத்தின் நடைமுறையான நரபலியே பின்னர் மரண தண்டனையானதாகவும், அதை பின்னர் பிரிட்டிஷார் ஒழித்ததாகவும், அப்படியும் இன்னும் 83 நாடுகளில் மரணதண்டனை நீடிக்கிறதே என்ற ஆதங்க நீட்சியாகவும் இந்தப் படம் முடிகிறது. இயக்குநர் இரண்டரை மணிநேரம் சொன்ன களவுக் கதைக்கும், இந்த கடைசி நிமிடத்து டைட்டில் மெஸேஜுக்குமான தொடர்பைக் கண்டுபிடிக்க தனி வரலாற்றுப் படமெடுப்பார்கள் போலிருக்கிறது!
அரவான் சரி ஓகே.. அவ்வளவுதான் ..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...