G.D.நாயுடு என்ற பெயரை கவுண்டமணி சொல்லித்தான் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.
"இந்தியாவிலே இரண்டு புத்திசாலிங்க ஒன்னு G.D.நாயுடு இன்னொன்னு நான்"
மேலும் இன்னுமொரு படத்தில் வரும் காட்சி.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்.அதை பார்ப்போம்
இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.
எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.
வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.
மரக்கரியில் இயங்கிய பஸ்
கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்
புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.
ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. "பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்".
அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்
G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018. INDIA
நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை ....
ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும்
No comments:
Post a Comment