யாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே…
அவரு எவ்வளவு பெரிய யோகி… தலைகீழ நிக்குறதெல்லாம் அவருக்கு பெரிய விஷயமா என்ன?
—————-
ஜெயலலிதா அண்ணா ஹசாரேவை ஆதரிக்கறாங்கன்னு எப்படி ஆணித்தரமா சொல்ற?
ஆமா… எல்லா பேச்சு முடிவுலயும் அண்ணா நாமம் வாழ்கன்னு சொல்றாங்களே…
??????????
——————-
வர வர எதுக்கு பெட்டு கட்டுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு…
ஏன்?
யோகி ராம்தேவ் உண்ணாவிரதம் அண்ணா ஹசாரே உண்ணா விரதத்தை விட டி.ஆர்.பி ரேட்டிங்க் ஜாஸ்தி போகுமான்னு பெட்டு கட்டுறாங்க !
—————
பரவாயில்லையே நம்ம தலைவரும் ஊழலை எதிர்த்து உண்ணா விரதம் இருக்க உக்காந்துட்டாரே!
நீ வேற… ஊழலை எதிர்த்து யாரும் உண்ணா விரதம் இருக்கக்கூடான்னு கோரிக்கை வச்சு செய்யற உண்ணா விரதமாம் இது!
—————-
இவ்வளவு கறுப்பு பணம் வச்சிருக்கற நம்ம தலைவரு எப்படி கறுப்பு பணத்த எதிர்க்குற பாபா ராம்தேவ் உண்ணா விரதத்தை ஆதரிக்குறாரு?
பாபா ராம்தேவ் வெளிநாட்டுல இருக்குற கறுப்பு பணத்த எதிர்த்து தான உண்ணா விரதம் இருக்குறாரு…. தலைவர் கறுப்பு பணமெல்லாம் உள்ளூர்ல பினாமி பேர்ல இல்ல இருக்கு!
———————-
ஆனாலும் மன்னருக்கு குசும்பு ஜாஸ்தி… ஆட்சியில ஊழல் மலிஞ்சுசுடிச்சின்னு உண்ணா விரதம் இருக்குற அந்த யோகி கிட்ட போய்
“வெறும் வயத்துல யோகா பண்ணலாமா பண்ணக்கூடாதான்னு” டவுட்டு கேக்குறாரு!
——————-
அவரு வித்தியாசமான சமுதாய நோக்கமுள்ள டாக்டரு!
எப்படி சொல்ற?
யாராவது பேஷண்ட் டயட்டுல இருக்கணும்னா நீங்க ஏன் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணா விரதம் இருக்கக் கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவாரு!
————————
ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு கீழ பிரதமமந்திரியை சேக்கலாமா வேணாமான்னு பாபா ராம் தேவ் சர்ர்சை கிளப்பி இருக்குறாரா அதப்பத்தி மன்மோகன் என்ன சொல்றாரு?
ஆட்சி ஆட்டத்துலயே தன்ன ராகுலும் சோனியாவும் சேத்துக்க மாட்டேங்குறாங்க… இதுல சேர்த்தா என்ன சேர்க்கலன்னா என்னன்னு சொல்றாரோ!
—————
தலைவருக்கு ஸ்விஸ் பேங்குல அக்கௌண்ட் இருக்குன்னு தெரிஞ்சு போச்சு…
அய்யய்யோ அப்புறம் என்ன ஆச்சு? சிபிஐ ஸ்விஸ் பேங்க் போயிருகாங்களா?
இல்ல…. அந்த அக்கௌண்ட ஜப்தி பண்ண கடங்காரங்க எல்லாம் இப்ப ஸ்விஸ் பேங்க் போயிருக்காங்க!
No comments:
Post a Comment