Thursday, 9 June 2011

கொஞ்சம் யோசிப்போமாக....

.


சர்தார்ஜி அடிக்கடி சமையலறைக்குள் நுழைவதும், சர்க்கரைப் பாட்டிலை எடுத்துப் பார்ப்பதுமாக இருந்தார். இதைக் கவனித்த அவரது மனைவி கேட்டார், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“டாக்டர் அடிக்கடி சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்”.
**************************************************************
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி


**************************************************************
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு ‘கொலஸ்ட்ரால் கொடுங்க’ என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை’ என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, ‘நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?’ என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், ‘இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது’ என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், “அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் “Colestrol FREE” ன்னு எழுதியிருக்கு..”
**************************************************************
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
**********************************************************
நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

**************************************************************
பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு

************************************************************
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!
*********************************************************
பப்பு (சான்டாவின் மகன்): ஒரு பாரம் நிரப்புகிறார் “மதர் டங்கு என்ற இடத்தில் என்ன எழுத”.சான்டா: 6 1/2 முழ‌ம் என்று எழுது.
.
************************************************************
சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”

************************************************************
நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்…
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்!
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று!
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!
************************************************************
சர்தார்-1 :- நீயும் நானும் அமெரிக்காவ சுத்தி பாக்குற மாதிரி கனவு கண்டேன்..

சர்தார்-2 :- அப்படியா...எங்கே எல்லாம் போனோம்...

சர்தார்-1 :- அடங்கொய்யால..நீயும் தானே என்கூட வந்த..

சர்தார்-2 :- ???????????
************************************************************
சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்.. குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?
"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ
************************************************************












டீச்சர்:-உன்கூட பிறந்தவங்க எத்தனை பேர்?








சர்தார்:- 96 பேர்.



டீச்சர்:- என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்?













சர்தார்:- ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..








டீச்சர்:- ?????


************************************************************

 சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்
சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .
சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.



 



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...