சில ஈரானிய படங்களைப் பார்க்கும் போது இது போல தமிழில் படங்கள் வராதா என்ற ஒரு ஏக்கம் சின்னதாய் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இதோ அதை நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம்.நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின்...நாம் பார்க்காத...பார்க்க விரும்பாத ...வாழ்க்கையை பதிவு செய்துள்ளார்.வலுவான கதைக்கு... திரைக்கதை உத்தியில்... பல்வேறு சாகசங்களை செய்து பிரமிக்க வைக்கிறார் பாலாஜி சக்திவேல்.
கதை:
ஆசிட் வீச்சில் முகம் வெந்து துடித்தபடி மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள் ஒரு வேலைக்காரப் பெண்ணை. போலீஸ் விசாரணை தொடங்குகிறது. அந்தப் பெண் வேலை செய்யும் வீட்டுக்கு எதிரே நடைபாதைக் கடையில் வேலை செய்யும் இளைஞன் மீது சந்தேகம் என்கிறாள் பெண்ணின் தாய். விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணையில் இளைஞனின் கண்ணீர்க் கதையும் அந்த வேலைக்காரி மீதான காதலும் மட்டுமே தெரியவருகிறது.
அப்போதுதான், அந்தப் பெண் வேலை செய்த வீட்டு எஜமானியின் மகள் வருகிறாள். வேறு ஒரு இளைஞனை விசாரிக்க வேண்டும் என அவள் புகார் கொடுக்க, விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணை வேலைக்காரிக்கு நீதியைப் பெற்றுத் தந்ததா என்பது கொஞ்சம் சினிமா, கொஞ்சம் Poetic Justice கலந்த க்ளைமாக்ஸ்!
இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இந்தக் கதை, ஒரு புள்ளியில் இணைவதே தெரியாமல் இணைகிறது. திரைக்கதையில் அத்தனை நேர்த்தி.
இன்ஸ்பெக்டர் குமரவேல். படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் படு யாதார்த்தமான நடிப்பு. மனுஷன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவ்வளவு இயல்பு. அவரது பாடி லேங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே படு சிறப்பு.
கூத்துக் கலைஞனாக வரும் சின்னசாமி அசத்தியிருக்கிறார்.
"இம்மாதிரியான படங்கள் நன்றாக ஓடினால்தான் நல்ல படங்கள் நமக்கு கிடைக்கும்."
No comments:
Post a Comment