1960 ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ.
அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக்கிழைமையின் மதிய உணவு இடைவேளையில் காதலன் சாமை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள் காதலி மரியான் (JANET LEIGH). திருமணத்தைத் தள்ளிப்போடும் காதலனுடனான சிறுவிவாதத்திற்குப் பிறகு அவள் தனது அலுவலகத்திற்குப் போகிறாள்.
புதியதாக ஒரு சொத்து வாங்க 40000 டாலர்களை மொத்தமாக ஒரு செல்வந்தர் கொடுக்க.. அதை வாங்கியவள் ‘வங்கியில் அதை டெபாசிட் செய்திவிட்டு அப்படியே வீட்டுக்குப் போகிறேன்’ என்று பாஸிடம் அனுமதி பெற்றுச் செல்கிறாள். அங்கேதான் படமும், அவள் வாழ்க்கையும் திசை மாறுகிறது.
ஏதோ ஒரு முடிவுடன் தனது அறைக்குச் சென்று ஆடைகளை ஒரு சூட்கேஸில் பேக் செய்து காரில் கிளம்புகிறாள் அவள். ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வந்து, காரை விற்று வேறு கார் மாற்றி… நார்மென் பேட்ஸ் (ANTONY PERKINS) என்பவருக்குச் சொந்தமான ஒரு விடுதியில் தங்குகிறாள். 12 அறைகளைக் கொண்ட அந்த விடுதியில் யாருமில்லை.
அந்த இரவில் உணவு கிடைப்பது அரிதென, நார்மென் பேட்ஸ் அவரது வீட்டில் டின்னருக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிச் செல்கிறார். அங்கே நார்மென் பேட்ஸுக்கும் அவரது தாயாருக்கும் வாக்குவாதம் நடப்பதை கேட்கிறாள் மரியான். சற்று நேரத்தில் நார்மென் பேட்ஸ் விடுதிக்கே உணவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.
அதன் பிறகு குளிக்கச் செல்கிறாள் மரியான் . அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. திடீரென வந்த யாராலோ குரூரமாகக் குத்திக் கொலை செய்யப் படுகிறாள்.
கடைசியாக இதற்கெல்லாம் என்ன காரணம் என அறிய சாம், லைலா இருவரும் செல்கின்றனர். பேட்ஸின் விடுதியில் அறை எடுத்துத் தங்கி.. பேட்ஸிடம் சாம் பேச்சுக் கொடுத்த வண்ணம் இருக்க.. பேட்ஸின் வீட்டிற்கு சென்று அந்த வயதான தாயாரைப் பார்க்க லைலா போகிறாள்..
அங்கே....
வயதான தாயென்று யாருமே இல்லை.
அப்படியானால் கொலை செய்ததெல்லாம்...?
அந்த வயதான தாய்தான். எப்படி?
படம் பாருங்கள்!
முதலில் தங்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை..ஐஎம்டிபியில் தங்களது பட்டியலை படித்த பிறகே இங்கு வருகிறேன்.அதுவே அருமையான பட்டியல்.நீங்கள் அதை தொடர வேண்டும்.
ReplyDeleteஇந்த படத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது..ஒரு மிகச் சிறந்த படைப்பு..இதனை பற்றி எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.
http://kumaran-filmthoughts.blogspot.com/2012/01/psycho-1960.html
நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்.நன்றி.