Thursday, 23 February 2012

வாகன விபரங்களை தெரிவிக்கும் எஸ்எம்எஸ் சேவை: மத்திய அரசு துவக்கம்


 வாகன பதிவு விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் மொபைல்போனிலேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன்மூலம், திருட்டு மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டுபிடுக்க முடியும்.

வாகன பெருக்கத்திற்கு தக்கவாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில், வாகன விபரங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.09212357123 என்ற மொபைல் எண்ணுக்கு vahan>space<சம்பந்தப்பட்ட வாகன பதிவு எண்ணைடைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.

அடுத்த ஒரு சில வினாடிகளில் பதில் எஸ்எம்எஸ் மூலம் வாகனத்தின் விபரம் நம் மொபைல்போனுக்கு வந்து விழுகிறது. அதில், உரிமையாளர் பெயர், வாகனம் எந்த ரகத்தை சேர்ந்தது, வரி காலாவதி ஆகும் விபரங்கள் உள்ளன.

இதன்மூலம், சேவையின் மூலம் திருட்டு வாகனத்தை வெகு எளிதாக கண்டுபிடித்துவிடலாம். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விபரங்களையும் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2003ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக இருந்தால், அந்த வாகனம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு ஒரு முறையாவது சென்றிருந்தால் அந்த வாகனங்களின் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம் போலி டாக்குமென்ட் மூலம் விற்பனைக்கு வரும் வாகனங்களையும், சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

Sunday, 19 February 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள்

                  
                                    இளைமையான படமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர் விளம்பரங்களால் ஏற்படுத்தியிருந்தாலும் சொதப்பியிருப்பாரோ என்ற ஒரு எண்ணம் உள்ளுணர்வாய் தோன்றிக் கொண்டேயிருந்தது. அதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
சில படங்களின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த படத்தை பொறுத்தவரையில் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை மிகப்பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கருவை சுமந்துகொண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளின் மூலம் படத்தை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அடுத்த நொடியிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கவும் முடிகிறது.


படம் போட்ட முதல் ரீல்லயே அந்நியன் டைப்ல ஒரு கொலை பண்றார்.
அதர்வா மார்டன் சாப்ட்வேர் இளைஞன். ஆபீஸில் இருக்கும் பெண்கள் எல்லாம் அவனையே மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவனோ சாரு என்கிற பெண்ணை காதலிப்பதாகவும், அவளுக்காகத்தான் வார இறுதியில் பெங்களூருக்கு போய் வருவதாகவும் சொல்கிறான்..அந்த கம்பெனில அம்லா பால் எம் டி.. அதர்வா அமலா பாலை தன் சென்னை ஐ டி கம்பெனியின் சி.இ.ஓ வாக பார்க்கிறார். ஒரு கொலை முயற்சிக்கு பிறகு, அதர்வாவை மனநல மருத்துவரான ஜெயப்பிரகாஷை விட்டு செக் செய்ய வைக்கும் போது அவர் சாரு என்கிற பெண்ணை உயிருக்கு உயிராய் காதலிப்பதாய் சொல்கிறார். . சி.இ.ஓ அமலா பாலை பெங்களூரில் இருக்கும் தன் காதலி போலவே அச்சு அசலாக இருப்பதாக மனதில் நினைத்துக் கொள்கிறார். அவர் லவ்வருக்கு ஃபோன் செய்து இங்கே சென்னையில் உன்னைப் போலவே ஒரு பெண்ணை பார்த்தேன் என்கிறார். அடிக்கடி ஃபோன்ல சாரு சாருன்னு உருகறார்.. சென்னைல இருக்கற அமலா பால் பேரு லதா.. அவருக்கு டவுட்...

அந்த சாரு யாரு? பெரிய ட்விஸ்ட் ஆமா.. இடைவேளை ....





சாரு இருக்கவே முடியாது ஏனென்றால் அந்த சாரு என்கிற சாருலதா நான் தான் என்கிறார் சி.இ.ஓ அமலா பால். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை முடிந்தால் பொறுமையுடன் வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்.
படத்துல சந்தானம் வர்ற 4 சீன்கள் செம கல கல .. இறுக்கமான திரைக்கதையில் அவர் ஒரு ரிலாக்ஸ்.
வசனம் சில இடங்களில் மட்டும் கொஞ்சம் கடி .
புதுசா ஒண்ணுமே இல்ல பாக்கலாம் அவ்வளவுதான்..
Related Posts Plugin for WordPress, Blogger...